• vilasalnews@gmail.com

படுமோசமாக தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு... உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு!

  • Share on

தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரையிலான 40 கிலோ மீட்டர் தூர இருவழிச் சாலையை சீரமைத்து புதுப்பிக்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக நெடுஞ்சாலை துறையின் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்காந்திமதிநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.


அதில், "தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரையிலான 40 கிலோ மீட்டர் சாலை தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் தூத்துக்குடி துறைமுகம், ஸ்பிக் நிறுவனம், உப்பளங்கள் போன்ற பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது.


தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் சென்ற பின்பு, இந்த சாலையில் எவ்விதமான பராமரிப்புப் பணியும் செய்யப்படவில்லை. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவில் இந்த பகுதியிலேயே வருகிறது.


நாள்தோறும் ஏராளமான வெளி நாடு மற்றும் வெளி மாநில பக்தர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் குண்டும், குழியுமாக மிகவும் சேதம் அடைந்து காணப்படுவதால் ஏராளமான விபத்துக்களும் ஏற்படுகின்றது.


இதனால், இந்த சாலையை முறையாக சீரமைக்க கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரையிலான 40 கி. மீட்டர் தூர இருவழிச் சாலையை சீரமைத்து புதுப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, "தமிழக நெடுஞ்சாலை துறையின் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

  • Share on

சர்வதேச விருது பெற்ற முதல் பெண்... தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்த பெண் காவலர்!

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்!!

  • Share on