
1. சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
2. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பகல்நேர இன்டர்சிட்டி இரயில் இயக்கப்பட வேண்டும்.
3. பெங்களுரில் இருந்து மதுரை வரை இயங்க கூடிய வந்தே பாரத் இரயில் சேவையை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும்.
4. தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை வாரம் இருமுறை இயக்கப்படும் இரயில் சேவையை தினசரி இரயில் சேவையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. சென்னை சென்டலில் இருந்து மாலை 6 மணிக்கு ஹைத்ராபாத் வரை செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் இரயிலை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும்.
6. விரைவில் பயன்பாட்டிற்கு வரக்கூடிய வந்தே பாரத் சிலீப்பர் இரயிலை தூத்துக்குடியில் இருந்து ஹெளரா வரை புதிய இரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. கடந்த 2009 ம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம், திருச்சூர், கர்நாடகா, கோவா வழியாக லோக்மானிக் திலக் இரயில்வே நிலையம் வரை இரயில் சேவை வழங்க அப்போதைய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அரசாணையை மறுபரிசீலனை செய்து தூத்துக்குடியில் இருந்து லோக்மானிக் திலக் இரயில்வே நிலையம் வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
8. தூத்துக்குடி – கன்னியாகுமரி வழி திருநெல்வேலி நாகர்கோவில் புதிய பயணிகள் இரயில் சேவைகளை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. தூத்துக்குடி – திருச்செந்தூர் - குலசேகரப்பட்டினம் - உடன்குடி- திசையன்விளை வழியாக கன்னியாகுமரி வரை புதிய கடற்கரை இரயில்பாதை அமைக்கபட வேண்டும்.
10. திருச்செந்தூரில் உள்ள இரயில் நிலையத்தின் நடைமேடை தற்போது 18 பெட்டி கொள்ளளவு உள்ளது. இது 23 பெட்டி கொள்ளளவு கொண்ட நடைமேடையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதே போன்று ஆறுமுகநேரி இரயில் நிலையத்தின் நடைமேடையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
11. இராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை - அருப்புகோட்டை – திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு புதிய இரயில் சேவை வழங்க வேண்டும்.
12. திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை நேர்வழி பாதையில் செல்லும் வகையில் புதிய இரயில் இயக்கப்பட வேண்டும்.
13.தூத்துக்குடி திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் வழியாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை இன்று ( பிப்.,17 ) மத்திய இணை அமைச்சர் முருகனை மதுரை விமான நிலையத்தில் தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட பாஜகவினர் நேரில் சந்தித்து அளித்தார்.