
விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இக்கூட்டங்களின் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், அவர்களின் நலன்களை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான "விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான "விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 20.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ”முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.