கோவில்பட்டி அருகே இளம்புவனம் கிராமத்தில் புதிய பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை ஆட்சியர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்.
விளாத்திகுளம் தொகுதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இளம்புவனம் கிராமத்தில் புதிய பேருந்து பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ( 20.2.2021) சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கவுன்சிலரும் ஒன்றிய செயலாளருமான ஞானகுருசாமி, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தனவதி,
இளம்புவனம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகுமார், சோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி சாமி, ரெகுராமபுரம் பால்வள கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் போடுசாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், வெற்றிவேலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.