
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதூர் மேற்கு மண்டலில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் கிருஷ்ணன் தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேதுராஜ், மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் லட்சுமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மண்டல் தலைவர் சிவபெருமாள் தலைமையில், மண்டல் பொதுச் செயலாளர் பெஞ்சமின் பாண்டியன், மேலக்கரந்தை வெங்கடேசன், கீழக்கரந்தை எல்லப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில், கிழக்கு மண்டல் தலைவர் பிரஸ் நேவ், வெம்பூர் மும்பை சீனிவாசன், புதூர் வேல்முருகன், பழனி முருகன், நாகலாபுரம் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம், செந்தில், டி.ஆர்.தங்க மாரியப்பன், சங்கரலிங்கபுரம் ஜெயராம், கண்ணன், ஆட்டோ ரமேஷ், உமையா செல்வராஜ், புதுப்பட்டி லட்சுமணன், ஓ துரைசாமிபுரம் ராஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.