
தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு முனியசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் ராஜா ( 45 ) கூலி தொழிலாளி. இவரது குடும்பத்திற்கும் எதிர் வீட்டில் குடியிருக்கும் ஜார்ஜ் மகன் சுரேஷ் ( 40 ) என்பவருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் அரிவாளால் ராஜாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜா ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுரேஷை தேடி வருகின்றனர்.