
தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.01.2025-ன் படி தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்ட 56 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100+1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசசான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்மந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.