தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் ரூ.60லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணிகளை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக சாலை அமைக்காமல் இருப்பதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலை காணப்படுகிறது. இதனால் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சார்ந்த வார்டு உறுப்பினர்கள் ஓன்றிய கவுன்சிலர்கள் ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், ஆகியோரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூஜை டேவிஸ்புரம், பூபாண்டியாபுரம், ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஆணையர் சித்தார்த்தன், ஊராட்சி ஆணையர் வசந்தா, ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், மாவட்ட கவுன்சிலர் அருண்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், வசந்தி, முத்துமாலை, பஞ்சாய்து துணை தலைவர் தமிழ்செல்வி, கவுன்சிலர்கள் மகேஸ்வரி, ஜீனத்பீவி, பாரதிராஜா, அந்தோணி பாலம்மாள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.