• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் காவல்துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய டாஸ்மாக் பார் உரிமையாளர்கள்!

  • Share on

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் காவல்துறை பொய் வழக்கு போடுவதை கண்டித்து தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் அரசு மதுபான கூடங்களை அடைத்து 2வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சுமார் 40 அரசு மதுபான கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசு மதுபான கடைகள் இல்லாமல் கள்ள சந்தையில் தனி நபர்கள் சிலர் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அரசு மதுபான கடைகளுடன் இணைந்து அரசு மதுபான கூடங்கள் நடத்தி வருகின்ற பார் உரிமையாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக காவல்துறையிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்காமல் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருவதாக பார் உரிமையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.


இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் காவல்துறை பொய் வழக்கு போடுவதை கண்டித்து  தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் அரசு மது கடைகளுடன் இயங்கும் சுமார் 40 மதுபான கூடங்களை அடைத்து  இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் காரணமாக, இந்த மதுபான கூட்டங்களில் வேலை பார்க்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் தூத்துக்குடி டாஸ்மாக் நிர்வாகத்திடம் தங்களது ஒப்பந்தத்தை முறித்து தங்களது இடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடைகளை உடனடியாக எடுக்க கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர் பார் உரிமையாளர்கள்.


எனவே இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டு காவல்துறை பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • Share on

தூத்துக்குடி விசிக மாவட்ட செயலாளரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்? கொதித்தெழுந்த சீமான்!!

தூத்துக்குடியில் 56 வழித்தடங்களில் மினிபேருந்துக்களை இயக்க விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியா்!

  • Share on