• vilasalnews@gmail.com

தூத்துக்குடியின் 90’ஸ் கிட்ஸா நீங்கள்... அப்படினா உங்களுக்கு இதைப்பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்!

  • Share on

வார இறுதி நாட்கள், பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளி சிறுவர்கள், கல்லூரி இளைஞர்கள் முதல் பணிபுரியும் அங்கிள்கள் வரை கூடி விளையாடிய இடம் இப்போது அடையாளமே தெரியாமல் மாறி விட்டது.


தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் பழைய பேருந்து நிலையத்திற்கும், காய்கனி மார்கெட்டுக்கும் நடுவே, இரண்டையும் இணைக்கும் பாலமான பகுதியில் அமைந்துள்ளது இந்த விளையாட்டு மைதானம். தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக நடைபெறும் விளையாட்டு போட்டிகள் தொடங்கி, அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் மின்னொளி கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள், தனியார் அமைப்புகள், வங்கி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் வரை அனைத்தும் அரங்கேறும் விளையாட்டு மைதானமாக இது விளங்கி வந்தது. மேலும், இந்த மைதானத்தில் தூத்துக்குடி மக்களின் பொழுதுபோக்கிற்கான சர்கஸ்சும் நடைபெறுவது வழக்கம்.


கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பொருட்டு, அவை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டு ரூ.58.67 கோடி செலவில் புதிய நவீன ஸ்மாட் சிட்டி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் கட்டப்பட்டது.


அந்த சமயத்தில் இந்த மைதானமானது  தற்காலிகப் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. மேலும்,  தற்போது பேருந்து நிலையம் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்து வெகு காலம் கடந்த பின்னரும் மைதானம் தன் பழைய நிலையை அடையவில்லை. 


பதின் பருவத்தினர் முதல் பணி விடுமுறை நாளில் இருப்பவர்கள் வரை அனைவரும் கவலை மறந்து துள்ளி விளையாடக் கூடிய இடமாக இருந்தது இந்த இடம். இப்போது அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது.


இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் கடந்து செல்லும் தூத்துக்குடி 90’ஸ் கிட்ஸ்கள் பலரும், தங்கள் பால்ய காலத்தைப் பசுமையான நினைவுகளாக வைத்திருந்த மைதானத்தில் எப்போது மீண்டும் களம் காண்போம் என ஏக்கமாகப் பார்த்தபடி கடந்து செல்கின்றனர்.


மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு


தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஒரிரு தினங்களுக்கு முன்பு இந்த விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்தப் பகுதியில் இருக்கும் கற்கள் அனைத்தும் அகற்றி மைதானம் சீராக வைக்கப்படும் என்றும், பொதுமக்கள் ஜெயராஜ் ரோட்டில் இருந்து அண்ணா பேருந்து நிலையம் வருவதற்கு அந்த திடலை பயன்படுத்தி வருகின்றார்கள். ஆகவே திடலின் ஓரத்தில் நிரந்தர பாதை ஒன்று அமைத்து தருமாறு வந்த மாநகர மக்களின் கோரிக்கையை தொடர்ந்து அதையும் நிறைவேற்றித் தருகிறேன் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

  • Share on

தெற்குசிலுக்கன்பட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள்!

தூத்துக்குடி விசிக மாவட்ட செயலாளரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ்? கொதித்தெழுந்த சீமான்!!

  • Share on