• vilasalnews@gmail.com

தூத்துக்குடி காவல்துறைக்கு தமிழக அரசு 32 இரு சக்கர வாகனம் வழங்கல்

  • Share on

தமிழக அரசு ரூபாய் 34,56,000/- மதிப்புள்ள புதிய இரு சக்கர வாகனங்களை 32 பெண் உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்களுக்கு தமிழக அரசு இன்று வழங்கியது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் பெண்கள் பயிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண்கள் பயிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விழப்புணர்வு வழங்கி வருகிறார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், மனித கடத்தல் போன்று குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு உதவியாக தமிழக அரசு ரூபாய் 34,56,000/- மதிப்புள்ள 32 இரு சக்கர வாகனங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு வழங்கியுள்ளது. மேற்படி புதிய இரு சக்கர வாகனங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி  கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் அவர்கள் தலைமையில் மோட்டார் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், அந்தோணி ராபிஸ்டன் கென்னடி, தலைமைக் காவலர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.

  • Share on

கோவில்பட்டியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் ரூ.60லட்சம் செலவில் புதிய சாலை

  • Share on