
விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தாயார் மறைவிற்கு, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் திரு. P. சின்னப்பன், Ex. M.L.A., அவர்களுடைய தாயார் திருமதி P. வையம்மாள் அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர் திரு. சின்னப்பன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திருமதி வையம்மாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.