• vilasalnews@gmail.com

போட்றா வெடியை... ஹேப்பி மூடில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக!

  • Share on

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களை பிடித்து பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 27 வருடத்திற்குப் பிறகு டெல்லி மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றியை பாஜக மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.


அந்த வகையில், டெல்லியில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக பாரதிய ஜனதா கட்சி புதூர் மேற்கு மண்டல் சார்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரத்தில்  பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சரவணன் கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் சேதுராஜ், வெம்பூர் சீனிவாசன், மண்டல்  தலைவர் சிவபெருமாள், மண்டல் பொருளாளர் நாகராஜன், மண்டல் பொதுச் செயலாளர் வெங்கடேசன், விளாத்திகுளம் வடக்கு ஒன்றிய தலைவர் கனக வேல்ராஜ், கிளைத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் மாரியப்பன், பால்ராஜ், ரகுராமபுரம் ஜெயக்குமார், ஜெயராம் இளைஞர் அணி நிர்வாகி வேல்முருகன், கவுண்டன்பட்டி நிர்வாகி லட்சுமண பெருமாள், கடற்கரை தங்கம், செல்லமணி, கல்யாணசுந்தரம், மேல் நம்பியாபுரம் ராமானுஜம், வேடப்பட்டி முனீஸ்வரன், முன்னாள் மண்டல் தலைவர் எல்லப்பன், அச்சங்குளம் முத்துராமலிங்கம், மண்டல் பொதுச் செயலாளர் பெஞ்சமின் பாண்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

  • Share on

விளாத்திகுளம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாயார் மறைவு : மார்கண்டேயன் எம்எல்ஏ நேரில் அஞ்சலி!

நாங்களும் இருக்கோம்... துணைக்கு நின்ற தூத்துக்குடி பாஜக!

  • Share on