
விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தாயார் வையம்மாள் மறைவிற்கு விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதில், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், முன்னாள் இராணுவ வீரர் மாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ், மாவட்ட பிரதிநிதி வெள்ளைச்சாமி, எப்போதும்வென்றான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமசந்திரன், கிளை செயலாளர்கள் குமார், லட்சுமணன்,பெருமாள்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்