
தூத்துக்குடி இந்து இளைஞர் முன்னணி மாநகர மாவட்ட சார்பில் தூத்துக்குடியில் இன்று ( பிப்.,9 ) காலை போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் கொடியசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார். ஊர்வலத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தை தொடர்ந்து சந்திப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் இந்து இளைஞர் முன்னணி நெல்லை கோட்ட ஒருங்கிணைப்பாளர் க.பிரம்மநாயகம், தூத்துக்குடி மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம், இந்து இளைஞர் முன்னணி மாவட்ட பார்வையாளர் நாராயணராஜ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.