
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தாங்கள் விலகி கொள்வதாக அறிவித்துள்ள சம்பவம் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளராக இருந்து வந்த வழக்கறிஞர் பிரைட்டர் திடீரென ஒரிரு தினங்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர், கட்சி உறுப்பினர் என அனைத்தில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி மாநகர், வடக்கு, தெற்கு புறநகர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை கட்சி தலைமை அறிவித்தது.
இந்த நிலையில், அமமுக பகுதி செயலாளர்கள் திரேஸ்புரம் பகுதி ஜான் பெர்னான்டோ, முத்தையா புரம் பகுதி மதன் குமார், சண்முக புரம் பகுதி முத்து செல்வம், வார்டு செயலாளர்கள் அய்யப்பன், முத்துச்சாமி, பவுல்ராஜ், மோச்சையா, டில்டன், ஹெரிங்டன், ஜெனிபர், வின்சென்ட், ரவின்டோ, மாரிசெல்வம, செல்வக் குமார், முகமது ஹசன், மணிகண்டன், அணிச் செயலாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தாமஸ் ஜோவர், மகளிரணி செயலாளர் முத்து மணி, மாணவரணி செயலாளர் பிரபாகரன், இளம் பெண்கள் பாசறை அன்னலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் பலர் தங்களை அமமுக கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநகர நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகிய சம்பவம் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.