கோவில்பட்டியில் நடைபெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் வைத்து, கோவில்பட்டி சட்டமன்ற தொதிக்குட்பட்ட, கோவில்பட்டி வட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வரவேற்புரையாற்றினார், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு, சுமார் 6.73 கோடி மதிப்பீட்டில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.