
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான மார்பக புற்று நோய் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நாளை (பிப்.8) நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப், உதவும் உள்ளங்கள் தொண்டு அறக்கட்டளை, நெல்லை கேன்சர் சென்டர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நாளை (பிப்.08) வ.உ.சி கல்லூரி அருகில் உள்ள மகளிர் பூங்காவில் வைத்து நடைபெற உள்ளது.
எனவே மேற்படி இலவச மருத்துவ பரிசோதனை முகாமிற்கு மகளிர்கள் வருகை தந்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.