
தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்தமிழ்அரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் (05.02.2025) தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி to தெர்மல்நகர் ரோடு பகுதியில் திருச்செந்தூர் ரவுண்டான அருகில், வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது,
அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கார்களை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் தூத்துக்குடி தேவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்களான வீரபுத்திரன் மகன் வசமுத்து (23), சின்ன பாண்டியன் மகன் மகேஷ் செல்வம் (35), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோவிந்தராஜ் (23) மற்றும் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்த கோபிநாத் மகன் காந்தி (21) ஆகிய 4 பேரும் சட்டவிரோத விற்பனைக்காக காரில் புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் வசமுத்து, மகேஷ் செல்வம், கோவிந்தராஜ் மற்றும் காந்தி ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.