
திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 6 மற்றும் 7-ஆம் தேதி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு நேற்று ( பிப்.,6 ) காலை வருகை தந்தார்.
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.என். நேரு, கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மார்கண்டேயன், சண்முகையா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலை வழியாக தனது காரில் விளாத்திகுளம் சென்றுகொண்டிருந்தார். அப்போது, தூத்துக்குடியைச் சேர்ந்த பொற்செல்வி என்பவர் குலதெய்வ வழிபாட்டுக்காக தனது குடும்பத்தினருடன் சிவகாசி சென்று குலதெய்வ வழிபாடு முடித்துவிட்டு மீண்டும் தூத்துக்குடி வரும்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக குறுக்குச்சாலை அருகே தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் விபத்தில் சிக்கியது.
இதனை அவ்வழியாக சென்ற விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் சற்றும் யோசிக்காமல் உடனே விபத்தில் சிக்கியிருந்த பொற்செல்வி குடும்பத்தினரை பொதுமக்கள் உதவியுடன் அவர்களை துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.
மேலும் வீடு செல்லும் வரை கவனமாக சொல்லுங்கள் வீடு சென்றவுடன் என்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கூறுங்கள் என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து, பொற்செல்வி குடும்பத்தினர் பொதுமக்கள் மற்றும் மார்கண்டேயன் எம்.எல்.ஏ.,விற்கு நன்றி தெரிவித்தனர்.