
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் தனிப்பிரிவு காவலர்கள் 49 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தனிப்பிரிவு காவலர்களாக கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் காவலர்கள் 49 பேர் அதிரடியாக இடம் மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆனந்த கிருஷ்ணகுமார் சிப்காட் காவல் நிலையத்திற்கும், சிப்காட் காவல் நிலையத்தில் இருந்த கலைவாணன் தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கும், மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு காவல் பணியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு புதிதாக தனிப்பிரிபு காவலராக சாமுவேலும், சிப்காட் காவல் நிலைய பொன்பாண்டி தட்டப்பாறை காவல் நிலையத்திற்கும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ராஜா சிப்காட் காவல் நிலையம் தனிப்பிரிவிற்கும், தென் பாகம் நிலைய தனிப்பிரிவிற்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பிரகாஷ் உள்பட மாவட்ட முழுவதும் 49 தனிப்பிரிவு காவலர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
இதில் தனிப்பிரிவுகாவலராக பணிபுரிந்த 13 பேர் காவல் நிலைய பணிக்கு அனுப்பப்பட்டனர். மேலும் காவல் நிலையத்தில் பணிபுரிந்த வந்த 8 பேர் புதிதாக தனிப்பிரிவு காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பிரிவு காவலர்கள் இடம் மாற்றம் செய்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.