• vilasalnews@gmail.com

ஈசிஆர் சாலை பரிதாபம்... களத்தில் குதித்த குளத்தூர் ஆட்டோ டிரைவர்கள்!

  • Share on

குளத்தூர் - தருவைகுளம் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் மழை வெள்ளத்தால் சாலை சேதமான நிலையில், மணல் மேடுகளால் அங்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலைகள் மீண்டும் சேதமடைந்த நிலையில், அதனை குளத்தூர் ஆட்டோ டிரைவர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.


குளத்தூரில் இருந்து வேப்பலோடை தருவைகுளம் வழியாக தூத்துக்குடி திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இதில் குளத்தூரில் இருந்து தருவைகுளம் வரையிலான சுமார் 14 கிலோமீட்டர் சாலை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட அதிக கனமழை பெரு வெள்ளத்தால் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது.


குறிப்பாக குளத்தூர் பனையூர் விலக்கிலிருந்து வேப்பலோடை செல்லும் வழியில் சுமார் 100 மீட்டருக்கு சாலை இரண்டாக துண்டானது. பின்னர் தற்காலிகமாக மணல்மேடுகள் அமைக்கப்பட்டு ஒரு வாகனம் மட்டுமே சென்று வரக்கூடிய அளவில் தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.


ஓராண்டை கடந்த நிலையில் இச்சாலை சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறாததால் மணல் மேடுகளால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலைகள் அடிக்கடி சேதமடைந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ள அந்த சாலைகளை குளத்தூர் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.


இதையடுத்து, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் சாலையை சீரமைத்த ஆட்டோ டிரைவர்களை பாராட்டினர். முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ள இப்பகுதியை விரைவாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொகுதி எம்பி கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோரிடம் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது வருத்தம் அளிப்பதாக வேதனை தெரிவித்த ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு இனியாவது வேகமாக சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எம்பி, எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்

  • Share on

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... தூத்துக்குடியில் தவெக ஆதரவு!

  • Share on