
தூத்துக்குடி அருகே சத்துணவு ஊழியரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பொன் நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி சுஜிதா ( 37 ) இவர் அங்குள்ள சத்துணவு கூடத்தில் சமையலராக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் சுஜிதாவின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் இரண்டு பவுன் தங்க செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட சுஜிதா செயினை பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார்.
இதில் சுமார் 4 கிராம் சங்கிலியை மட்டும் பறித்துக் கொண்டு பைக்கில் வந்த இருவரும் தப்பி சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.