• vilasalnews@gmail.com

பட்டா விவகாரம் : தூத்துக்குடி மக்களுக்கு குட் நியூஸ்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசித்துவரும் குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கிரைய பத்திரம் வைத்திருந்து குடியிருந்து வரும் குடியிருப்புதாரர்கள் மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வைத்திருப்பவர்கள் இதுவரை கணினி பட்டா பெறாத குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெறுவதற்கான தங்கள் மனுக்களை 09.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பெற்றுக்கொள்ளவுள்ளார். 


எனவே, கணினி பட்டா பெறுவதற்கான மனுக்கள் வழங்கும் நபர்கள் கிரையப் பத்திர நகல் அல்லது அரசு வழங்கிய பட்டா மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் கணினி பட்டா பெறுவதற்கு மனுக்களை அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  • Share on

இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

  • Share on