• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (05.02.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும்  புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (05.02.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துள்ளனர்.


மேலும், இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் மற்றும் காவல் நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுவதாக கூறியுள்ளனர்.

  • Share on

நாளை 5 மணி நேரம் இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது!

தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு!

  • Share on