தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று கருப்பு தினம் அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் நடந்த பிப்ரவரி 19ம் தேதியை தேசிய கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரித்து வருகின்றனர்.
இதையொட்டி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று கருப்பு தினம் அனுசரித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் 150 பெண்கள் உட்பட 700 வழக்கறிஞர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.