
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே பரமன் பச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் சோமசுந்தரம். இவருடைய மனைவி காஞ்சனா தேவி. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இந்த இரண்டு வயது குழந்தை அண்டாவில் துவைப்பதற்காக துணி ஊறவைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த துணியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தண்ணீர் நிரம்பி இருந்த அண்டாவில் தலை குப்பிற விழுந்தது மூச்சு விடமுடியாமல் தத்தளித்த நிலையில் உயிருக்கு போராடியுள்ளது.
சிறிது நேரம் கழித்து குழந்தையை காணவில்லை என குழந்தையின் தாய் காஞ்சனா தேவி குழந்தையை தேடிய நிலையில், அப்போது அவர் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த அண்டாவிற்கு அருகே வந்து பார்த்தார்.
குழந்தை தல குப்புற கவுழுந்த படி கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் காஞ்சனா தேவி குழந்தையை மீட்டு அருகில் இருந்த பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த செவிலியர்கள், குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவை எனை கூறி 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்டாவில் தலைப்புற கவிழ்ந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் இருக்கும் பச்சிளம் பிஞ்சுகளை நொடிபொழுது கவனிக்க தவறினாலும், எந்த மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இது போன்ற சம்பவமே ஒரு சாட்சிகளாக அமைகிறது என்பது குறிப்பிடதக்கது.