• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே சாலை விபத்து : தந்தை பலி; மகன் படுகாயம்!

  • Share on

விளாத்திகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் தந்தை உயிரிழந்தார். அவரது 7 வயது மகன் படுகாயம் அடைந்தார். 


தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள பூசனூர், கீழத் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் உதயகுமார் (37) லாரி டிரைவராக உள்ளார். இவர் நேற்று தனது மகன் முத்தமிழன் (7) உடன் விளாத்திகுளத்தில் உறவினர் வீட்டு கிரகப்பிரவேச விழாவிற்கு சென்று விட்டு  பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தார். மார்த்தாண்டம்பட்டி அருகே வரும்போது, தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற ஒரு ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.


இதில் தந்தை மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உதயகுமார் பரிதாபமாக இறந்தார். மகன் முத்தமிழன் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆட்டோவை ஓட்டி வந்த குருவார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஜெயம் பெருமாள் மகன் பாலமுருகன் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

எளிய மக்களை அரசியலின் மையமாக்கிய தலைவர் அறிஞர் அண்ணா : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

தமிழ்நாட்டில் இதை அனுமதிக்க வேண்டும்... தூத்துக்குடியில் எழுந்த கோரிக்கை

  • Share on