• vilasalnews@gmail.com

எளிய மக்களை அரசியலின் மையமாக்கிய தலைவர் அறிஞர் அண்ணா : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

  • Share on

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் மேற்கொண்டு பின்னர் அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் ராஜாஜி பூங்கா முன்பிருந்து துவங்கி பிரதான சாலை வழியாக வந்து காமராஜ் மார்க்கெட் எதிரில் உள்ள அண்ணா சிலையை அடைந்தது. அங்கு அண்ணாவின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


அதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 


இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்ன லட்சுமி கோட்டுராஜா, பாலகுருசாமி, நிர்மல் ராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மகளிர் அணி செயலாளர் கவிதா, வழக்கறிஞர் செயலாளர் பரிதிஇளம், வழக்கறிஞர் ஜே.எஸ் ரூபஸ் அமிர்தராஜ், மருத்துவ அணி அருண்குமார், அயலகஅணி எஸ்எஸ்பி அசோக், வழக்கறிஞர் கிறிஸ்டோபர், விஜயராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார்,  மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், வைதேவகி, முத்துவேல், பொன்னப்பன் இசக்கி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநில தலைவரை கௌரவித்த தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்பு நிர்வாகி!

விளாத்திகுளம் அருகே சாலை விபத்து : தந்தை பலி; மகன் படுகாயம்!

  • Share on