• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் இனி காலையில் தான் மீன்கள் ஏலம்!

  • Share on

தூத்துக்குடியில் மீன் பிடி துறைமுகத்தில் இனிமேல் காலையில் தான் மீன்கள் ஏலம் நடக்கும் என்று விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270 விசைப்படகுகள் மூலம் சுழற்சி முறையில் தினமும் அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று இரவில் கரை திரும்பி அன்றைய தினம் இரவே மீன்கள் ஏலம் விடுவது வழக்கம். இந்த முறைதான் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், தற்போது மீனவர்களின் கோரிக்கையை ஏற்று நாள்தோறும் காலை 8 மணிக்கும், சனிக்கிழமை மட்டும் இரவு 8 மணிக்கும் மீன்கள் ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறையானது நேற்று ( சனிக்கிழமை ) முதல் நடை முறைக்கு வந்தது.


தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் இரவு நேரங்களில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த கேரள விசைப்படகுகளை சிறைபிடித்தது தொடர்பாக தூத்துக்குடியில் 11 விசைப்படகுகள், மீனவர்கள் மீது மீன்வளத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் ஆழ் கடலில் தங்கி இருந்து மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மீன்வளத்துறை நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் கடந்த 30ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டு மறுநாள் அதிகாலை வழக்கம் போல மீன்பிடிக்க சென்றனர். இரவு கரை திரும்பி அன்றைய தினமே இரவில் மீன்களை ஏலம் விட்டிருக்க வேண்டும். ஆனால் விடவில்லை. நேற்று காலை ஏலம் விட்டனர். இனிமேல் நாள்தோறும் காலை 8 மணிக்கும், சனிக்கிழமை மட்டும் இரவு 8 மணிக்கும் மீன்கள் ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக விசைப்படகு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியாரின் 130 வது பிறந்த நாள் : மார்கண்டேயன் எம்எல்ஏ மரியாதை!

திருச்செந்தூர் கோயிலில் தைப்பூச திருவிழாவிற்கு வருவோர் கவனத்திற்கு!

  • Share on