• vilasalnews@gmail.com

இலங்கைக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!

  • Share on

கூடங்குளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர். 


திருநெல்வேலி சரக கியூ பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னம்பலம் உத்தரவின் பேரில், தூத்துக்குடி கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி, முத்து முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமம் இசிஆர் ரோட்டில் இருந்து கூட்டப்புளி கடற்கரைக்குச் செல்லும் வழியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டடிருந்தனர்.


அப்போது, இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக 2 வேன்களில் 30 கிலோ எடை கொண்ட தலா 42 மூட்டைகள் மொத்தம் 2500 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.50 இலட்சம் ஆகும். இது தொடர்பாக பணகுடியைச் சேர்ந்த தாசன் மகன் ஜெபஸ்டின் (33) சாமி மகன் பரமசிவம் (48) தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் காட்சன் (29) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Share on

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் கையகப்படுத்திய 72 ஏக்கர் புறம்போக்கு நிலம்....அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியாரின் 130 வது பிறந்த நாள் : மார்கண்டேயன் எம்எல்ஏ மரியாதை!

  • Share on