
தூத்துக்குடி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் இருவார தடுப்பூசி முகாம் நாளை (பிப்.,1) முதல் இருவாரங்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் நோய் இருவார தடுப்பூசி முகாம் 01.02.2025 முதல் 14.02.2025 வரை இருவாரங்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாமில் இம்மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில் 154400 டோஸ்கள் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், அரசினர்d கால்நடை மருத்துவ கிளை நிலையங்களில் தடுப்பூசி முகாமிற்கான கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டு கிராமங்களில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.
இவ்வரிய வாய்ப்பினை கோழி வளர்ப்போர் பயன்படுத்திக் கொண்டு கோழிகளை நோயின்றி காப்பாற்றிட தவறாமல் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை அணுகும்படி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.