சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் சமூக மேம்பாட்டு திட்ட முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், சேதுக்குவாய்த்தான் ஊராட்சி மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இசேவை மையம் இணைந்து நடத்திய சமூக மேம்பாட்டு திட்ட முகாமானது சேதுக்குவாய்த்தான் ஊராட்சி சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது. இம்முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் சுதாசீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இதில், ஆதார்கார்டு பெயர் மாற்றம், விதவைகளுக்கான உதவி தொகை, முதியோர் உதவி தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொகை உள்ளிட்டவைகள் பெற விண்ணப்பித்தல், மருத்துவக் காப்பீடு திட்டம், இருப்பிடச் சான்றிதழ் சாதிசான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்தல் போன்ற சமூக திட்டங்களுக்கான இசேவை பணிகள் நடைபெற்றது. மேலும், இத்திட்ட முகாம் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இம்முகாமில் சீனிவாசா சேவைகள் அறக்கட்டளையின் ஊழியர்கள் மொரின்குமாரி, முருகன், இசக்கி மற்றும் ஊராட்சி செயலர் மாரிராஜ், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் , பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்