வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஓட்டப்பிடாரம் தொகுதியில் சிறப்பு முகாம் தொடங்கியது.
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 21, 22, டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய முதற்கட்ட சிறப்பு முகாம் இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளான, தேவர்காலனி 14 வார்டு பகுதியில் நடைபெற்றது. இதில், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டனர்.