• vilasalnews@gmail.com

கடும் போட்டிகளுக்கு நடுவே மீண்டும் தேர்வானார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர்!

  • Share on

தமிழக பாஜகவில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து, உட்கட்சித் தேர்தல் தொடங்கியது. அதில், கிளை தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 


இதற்கிடையே, தமிழக பாரதிய ஜனதா கட்சி அமைப்பு ரீதியாக 67 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 33 மாவட்ட தலைவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் 34 மாவட்ட தலைவர்களுக்கான அறிவிப்பு  வெளியாகாமல் இருந்தது.


இதில், தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த வெங்கடேசன் சென்ன கேசவன் பதிலாக, புதிய தலைவராக சரவண கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கோவில்பட்டி மாவட்ட பாஜக அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் போத்தீஸ் ராமமூர்த்தி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 


இதற்கிடையே தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற கட்சி நிர்வாகிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதனால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் யார் என்று அக்கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தூத்துக்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் இரண்டாவது முறையாக சித்ராங்கதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதனையடுத்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக எனக்கு இரண்டாவது_முறையாக வாய்ப்பளித்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஜி அவர்களுக்கும், பாரதப்பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும், மாநிலத்தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கும் 


நாம் வாழ்வது சிலகாலம் ஆனாலும், அது நம்பாரத தேசத்தின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்ற தீவிர கொள்கை பிடிப்புடன் மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் முன்நின்று  ஆளும் கட்சியினரின் அடக்குமுறைக்கும், காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளுக்கு உள்ளானாலும் தளரா நெஞ்சுரத்தோடு தேசநலனுக்காக பல்வேறு தியாகங்களை செய்த அனைத்துக் கார்யகர்த்தர்களுக்கும், தாமரை சொந்தங்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


இனிவரும் காலத்திலும் இதே உற்சாகத்துடன் அனைவரும் இணைந்து மக்கள்விரோத ஆட்சியை அகற்றி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளும் தாமரையை மலரச் செய்து அந்த வெற்றியை தேசத்தற்காக போராடிய  தியாகிகளின் திருவடிகளில் காணிக்கையாக உறுதிகொள்வோம் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்... மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது!

உங்க கிட்ட கோழி இருக்கா... இதோ உங்களுக்காக!

  • Share on