தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25ம் தேதி (வியாழக்கிழமை )நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 25.02.2021 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்” வைத்து நேரடியாக நடைபெற உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்