
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.ஏ. பிரைட்டர் விலகியுள்ளார்.
இது தாெடர்பாக அவர் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்:-
எனது தனிப்பட்ட காரணங்களுக்காக தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன். இதுநாள்வரை பொறுப்புகளை வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுநாள் வரை ஒத்துழைப்பு வழங்கிய கட்சியினருக்கும் அவர் நன்றி என தெரிவித்துள்ளார்.