
மனப்பாடு அருகே உள்ள எள்ளுவிளை கிராமம் எதிரே உள்ள கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்கு வைத்திருந்த 37 பீடி இலை பண்டல்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், மனப்பாடு அருகே உள்ள எள்ளுவளை கிராமம் எதிரே உள்ள கடற்கரையில், இன்று அதிகாலை 02.00 மணியளவில் மாடசாமி, கோமதிநாயகம், ராஜேந்திரகுமார், மாரியப்பன், செல்வக்குமார், இசக்கி, கற்பகராஜா, கார்திகேயன், தங்கம், முனியராஜ், பக்ருதீன், குசன், முருகன், உள்ளிட்ட கடல் காவல் பணி காவலர்கள் ரோந்து பணியில் இருந்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக இருந்த சுமார் 30கிலோ எடை கொண்ட 37 பீடி இலை பண்டல்கள் மற்றும் கடத்தல் காரர்கள் பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.