
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, தற்போது கவர்ச்சியை கையில் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதகளப்படுத்தி வருகிறார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தகைய நிலையில் தர்ஷா குப்தா நாளை (ஜனவரி 29 ) தூத்துக்குடி வருகிறார்
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் நாடகம் மூலம் நடிகை தர்ஷா குப்தா அறிமுகமானார். அந்த நாடகத்தை தொடர்ந்து செந்தூரப்பூவே நாடகத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அவை அனைத்தும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பதால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த போட்டோக்களில், கவர்ச்சி சற்று தூக்கலாக இருந்ததால் இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இன்ஸ்டாகிராமில் பிரபலமானதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டார். ஆனால், அங்கு அவரால் பிரகாசிக்க முடியாமல் போகவே போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர் ரிஷிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்தார். தற்போது இவரின் கைவசம் மெடிக்கல் மிராக்கிள் என்ற திரைப்படம் உள்ளதாம்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, அதில் அழுதே பல காரியங்களை சாதித்து வந்தாலும் விளையாட்டை சரியாக விளையாடாமல், போன வேகத்திலேயே திரும்பி வந்தார். பின்னர் மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்து தனது இன்ஸ்டாகிராமை அதகளப்படுத்தி வருகிறார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தகைய நிலையில் நாளை (ஜனவரி 29 ) தூத்துக்குடி வருகிறார் தர்ஷா குப்தா
தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு ஸ்ரீபிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமகா காலபைரவர், குருமகாலிங்கேசுவரருக்கு விஷேச நாட்களில் 'சாக்தஸ்ரீ' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அதன்படி, நாளை ஜனவரி 29 ஆம் தேதி சித்தர் பீடத்தில் ஒரு லட்சத்து எட்டு எலுமிச்சை பழத்துடன் கூடிய மகா யாக சிறப்பு வழிபாடுகள் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக நாளை (ஜனவரி 29 ) தூத்துக்குடி வருகிறார் தர்ஷா குப்தா.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.