கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் விரைந்து வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று (18.02.2021) நேரில் ஆய்வு செய்தார்.
கயத்தாறு வட்டாட்சியர் அலுவலத்தில் கயத்தாறு வட்டத்தில் உள்ள ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ள மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் இலவச பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை வழங்குதல், பட்டா உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதியில் வழங்கப்பட உள்ள மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக நல அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தங்கள் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் விவரங்களை தயார் செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலத்தில் கோவில்பட்டி வட்டத்தில் உள்ள ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ள மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் இலவச பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை வழங்குதல், பட்டா உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதியில் வழங்கப்பட உள்ள மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக நல அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தங்கள் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் விவரங்களை தயார் செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், வட்டாட்சியர்கள் பாஸ்கரன் (கயத்தாறு), மணிகண்டன் (கோவில்பட்டி) சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் செல்வகுமார், மல்லிகா, கோவில்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் மற்றும் சமூக பாதுகாப்பு அலுவலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.