
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு புதியம்புத்தூர் Lovely Cricket Club நடத்திய 5 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பைகளையும் வழங்கினார். இதில் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாப்பிள்ளையூரணி மாதா நகர் அணியினருக்கு ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் பரிசுத்தொகை 20 ஆயிரத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் லிங்கராஜ், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் ராஜா ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஞானதுரை, வர்த்தகர் அணி முத்துக்குமார், மாணவரணி தங்கதுரை பாண்டியன், மருத்துவர் அணி தங்கவேல்சாமி, நெசவாளர் அணி ஈசன் சுரேஷ், ஆதிதிராவிடர் அணி மாடசாமி, கருப்பசாமி
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காமராஜ், ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, இளைஞரணி ஜெகன், பார்த்திபன், கிளை செயலாளர்கள் இளங்கோ, சிவமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.