• vilasalnews@gmail.com

அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் : சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு

  • Share on

இந்திய திருநாட்டின் 76 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.


மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் மின்சாரம் போன்றவற்றை தடையின்றி வழங்குவதற்கு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் மற்றும் காசநோய் மற்றும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழிகளை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்வில் யூனியன் ஆணையாளர் சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் திலிப்குமார், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், வட்டார கல்வி அலுவலர் பவணந்திஸ்வரன், வட்டார சுகாதார ஆய்வாளர் காளிமுத்து, வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, குழந்தைகள் வளர்ச்சி திட்டம் நாகம்மாள், தலைமை ஆசிரியர்கள் ஜெயக்கொடி, புவனேஸ்வரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை, ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன், தகவல் தொழில்நுட்ப அணி ரமேஷ், இளைஞரணி மகேஷ், ஆகாஷ் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

12 கி.மீ தொலைவிற்கு 2400 மரக்கன்றுகள் : கிராம சபை கூட்டத்தில் மார்கண்டேயன் எம்எல்ஏ வலியுறுத்தல்!

இலுப்பையூரணி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு!!

  • Share on