
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், நமச்சிவாயபுரம் ஊராட்சியில் நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் மின்சாரம் தடையில்லாமல் வழங்கிடவும் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் பயனாளிகளின் விவரம் குறித்தும் கேட்டறிந்தார்கள்.
மேலும் கூட்டத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பாக நில வளத்தையும், நீர் வளத்தையும் பாதுகாக்கும் உறுதிமொழி மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி, வாக்காளர் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது. நமச்சிவாயபுரம் கிராமத்தை சுற்றிலும் 12 கி.மீ தொலைவிற்கு 2400 மரக்கன்றுகள் நட்டவும் எம்எல்ஏ அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சந்திரசேகர், மண்டல துணை வட்டாட்சியர் பொன்னம்மாள், தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) மலர்விழி, விளாத்திகுளம் வட்டார மருத்துவ அலுவலர் இன்பராஜா, விளாத்திகுளம் வேளாண்மை அலுவலர் நவநீதன், விளாத்திகுளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவகுமார், உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வன் சரத்குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,
மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, ஆதிசங்கர், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிராஜ் பாண்டியன், தொழிலதிபர் சங்கர் ராம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.