
இந்தி திணிப்புக்கு எதிராக போராடி உயிர்நீர்த்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க.ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைப்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின் படியும்,
திருச்செந்தூரில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிராக போராடி உயிர்நீர்த்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார்.
திமுக தலைமை கழக பேச்சாளர்கள் ஆரூர் மணிவண்ணன் மற்றும் திருப்பூர் கூத்தரசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் தியாகம் குறித்தும், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக எவ்வாறெல்லாம் போராடி வருகிறது குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.