• vilasalnews@gmail.com

சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி மாவட்ட திமுக... விரைந்த எம்பி., சபாநாயகர்., அமைச்சர்., எம்எல்ஏக்கள்!

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனின் நேர்முக உதவியாளராக இருந்து பணியாற்றிய கருணா என்ற கருணாநிதி இன்று அதிகாலை திடீரென காலமானார். 


இதையடுத்து, தூத்துக்குடி சங்கரபேரி ஹவுசிங் போர்டு காலனி கே.டி.சி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாநகரச்செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.


மேலும், துணை மேயர் ஜெனிட்டா,மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜான் அலெக்ஸாண்டர், ரமேஷ், சிஎஸ்.ராஜா, மண்டல தலைவர்கள் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, மும்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதக்கண்ணன், அன்புராஜன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, 


மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், மதியழகன், குபேர்இளம்பரிதி, கவிதாதேவி, அபிராமிநாதன், அசோக், சீனிவாசன், ஜெபசிங், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்சுந்தர், பரமசிவம்,  கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வகுமார், சேர்மபாண்டியன், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, இலக்கிய அணி மகாராஜன், முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், 


தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ரவி, பார்த்திபன், ஜோசப், சரவணக்குமார், பகுதி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள்; வெயில்ராஜ், தர்மராஜ், தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து கருணாநிதியின் உடல் மாப்பிள்ளையூரணியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  


மறைந்த திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி முதல் அவரது மகளும் தற்போதைய தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் உடன் வரை நேர்முக உதவியாளராக பயணித்து, அனைவராலும் கருணா என அழைக்கப்படும் கருணாநிதி இன்று அதிகாலை திடீரென காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.


  • Share on

பிக்பாஸ் வெற்றிக்கான ரகசியம்... பகிரங்கமாக போட்டுடைத்தார் முத்துக்குமரன்!!

திருச்செந்தூரில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் : சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடந்தது!

  • Share on