• vilasalnews@gmail.com

பிக்பாஸ் வெற்றிக்கான ரகசியம்... பகிரங்கமாக போட்டுடைத்தார் முத்துக்குமரன்!!

  • Share on

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று அங்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது வேண்டுதலை செய்து முடித்தார். பின்னர் அவரது வெற்றியின் ரகசியம் என்ன என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்களும் ஒவ்வொரு நாளும் வருகை வந்து முருகனை வழிபடுவார்கள்.


இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் செந்தமிழில் பேசி அசத்தும் முத்து, நிறைய கவிதைகள், பாடல்களையும், நீண்ட தமிழ் வசனங்களையும் பேசி மக்கள் மனதில் நின்று வெற்றியாளரானார் முத்துக்குமரன். 


அவருக்கு அவருடைய தாய் தான் முதல் தமிழ் ஆசான் என பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார். இவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என முதல் ஆளாக வெளியே வந்த ரவீந்திரன் சந்திரசேகரன் அப்போதே கணித்து சொன்னார். இதைத் தொடர்ந்து அவரது ஆட்டத்தை பார்த்து மக்களும் முடிவு செய்தனர்.


அந்த வகையில், கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே நடந்தது. இதில், கடைசியாக பிக்பாஸ் வீட்டிற்குள் முத்துக்குமரன், சவுந்தர்யா, விஷால் ஆகியோர் இருந்தனர். இவர்களில் 3 ஆவது இடம் விஷாலுக்கும், இரண்டாவது இடம் சவுந்தர்யாவுக்கும், முதல் இடம் முத்துக்குமரனுக்கும் கிடைத்தது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரான நிலையில் முத்துக்குமரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். இதையடுத்து எல்லா சுவாமிகளையும் கும்பிட்டு விட்டு விழுந்து வணங்கினார்.


தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த முத்துக்குமரனுடன் பக்தர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செல்பி எடுத்து மகிழ்ந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது:-


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தேன். முருகன் அருளால் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வென்றேன். இதனால் முருகனுக்கு நன்றி செலுத்த வந்தேன் என்றார். வெற்றி பணத்தில் வீடு கட்ட ஒரு தொகை கொடுத்து விட்டு, தனது நண்பர்கள் இருவருக்கு கடை வைக்க உதவி செய்ய வேண்டும் என்றும் அரசு பள்ளிக்கு பாரதியார் கவிதை உள்ளிட்ட புத்தகங்களை வாங்கி தர வேண்டும் என்றும் பிக்பாஸ் மேடையிலேயே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

பெண் எடுத்த விபரீத முடிவு... சற்றும் யோசிக்காமல் இறங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்!

சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி மாவட்ட திமுக... விரைந்த எம்பி., சபாநாயகர்., அமைச்சர்., எம்எல்ஏக்கள்!

  • Share on