• vilasalnews@gmail.com

தூத்துக்குடி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு!

  • Share on

இந்தியாவின் 76 வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 


1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த தினத்தையே நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த தினத்தில் நம் நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், ராணுவ வலிமை, ஒற்றுமை ஆகியவற்றை காட்சிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 


இந்த நிலையில் நாடு முழுவதும் வருகிற 26ஆம் தேதி 76 வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளதைத் தொடர்ந்து, குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி 30 ஆம் தேதி வரை பார்வையாளர்கள் விமான நிலையம் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Share on

76 வது குடியரசு தின விழாவில் தூத்துக்குடி இளைஞருக்கு வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுமா?

தூத்துக்குடி அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!!

  • Share on