• vilasalnews@gmail.com

வாலிபால் இறுதிப்போட்டி : முதல் பரிசை தட்டிய தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் அணியினர்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு இடையே நடைபெற்ற வாலிபால் போட்டியின் இறுதிப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகோப்பை வழங்கி பாராட்டினார்


தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக ஆயுதப்படை மற்றும் அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கு இடையேயான வாலிபால் போட்டி நடைபெற்றது.


அதில், இறுதிப் போட்டிக்கு தகுதியான தூத்துக்குடி நகரம் மற்றும் திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறை அணியினருக்கிடையேயான போட்டியை இன்று (23.01.2025) மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து வெற்றி பெற வாழ்த்தினார்.


பின்னர் போட்டியில் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்ற தூத்துக்குடி நகர உட்கோட்ட அணியினர் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்ற திருச்செந்தூர் உட்கோட்ட அணியினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகோப்பை வழங்கி பாராட்டினார்.


இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் தூத்துக்குடி பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் மீனா உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

  • Share on

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி

தூத்துக்குடி கடற்கரையை காக்க களமிறங்கிய மாணவர் படை!

  • Share on