
விளாத்திகுளம் வட்டம், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் கடந்த கல்வி ஆண்டில் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத் தொகையும், ஆசிரிய - ஆசிரியைகளுக்கு பரிசு பொருள்களும், பள்ளியில் வினாடி - வினா போட்டி வைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத் தொகையும் வழங்கினார்கள்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அற்புதராஜ், விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளரார் ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி, ஒன்றிய துணை செயலாளர் ராஜபாண்டி, மாவட்ட பிரதிநிதி செந்தூர்ப்பாண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், கிளைச் செயலாளர்கள் முருகேசன், முனியசாமி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பேச்சிமுத்து, வேல்முருகன்,
முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், குருநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்செல்வி, கிளை பிரதிநிதி மந்திரமூர்த்தி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேச செல்வின், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.