• vilasalnews@gmail.com

தூத்துக்குடி கடல் வழியாக அதிகரிக்கும் கடத்தல்.... கேள்விக்குறியான பாதுகாப்பு!

  • Share on

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்தப்பட இருந்த 12 கிலோ போதைப்பொருள், இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்பிலான விலி நிவாரண மாத்திரை உள்ளிடவைகளை அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது. மேலும், கடலோர பாதுகாப்பும் கேள்விகுறியாகி உள்ளதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.


தூத்துக்குடி பழைய துறைமுக கடற்கரையில் இருந்து படகு மூலம் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனையில் 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். சர்வசேத சந்தையில் இதன் மதிப்பு 12 கோடி. பழைய துறைமுக பகுதியில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரின் உதவியுடன் போதைப்பொருள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதனையடுத்து, போதைப்பொருள் கடத்த முயன்ற சுதாகர், ஜேசுராஜ், கிங்சிலி, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அதே போல, தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்பிலான விலிமாத்திரை, உள்ளிட்ட போதை பொருளை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் அவ்வப்போது கடத்தப்பட்டு வருகின்றன. 


இதனால் அவ்வப்போது கடத்தல்காரர்கள் பிடிபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இனிகோநகர் அருகே காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சில மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


உடனடியாக போலீசார் இனிகோநகர் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு சுமார் 70 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து போலீசார் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ சமையல் புளி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதன் இலங்கை மதிப்பு ரூ.70 லட்சம் என்று கூறப்படுகிறது. 


மேலும் 10 மூட்டைகளில் பட்டாசு மற்றும் மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உரிய விசாரணைக்கு பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


தூத்துக்குடியில் அடுத்தடுத்து கடல் வழியாக கடந்த இருந்து பொருட்கள் பிடிபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடத்தலில் ஈடுபட தூத்துக்குடி கடல் வழி எளிதாகவும், பாதுகாப்பற்ற தன்மையாகவும் இருப்பதாக உணர்ந்து கடத்தல் காரர்கள் தூத்துக்குடியை தேர்வு செய்கிறார்களா? தூத்துக்குடி கடல் வழியின் பாதுகாப்பு என்பது கேள்விகுறியாகத்தான் உள்ளதா? மேலும், இது போன்ற கடத்தல் சம்பவங்களில் பாதுகாப்பு துறை  கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததே தொடர்ந்து கடத்தல்காரர்களுக்கு கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் துணிவை தருகிறதா? என்ற பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

  • Share on

கோவில்பட்டியில் பள்ளி வாகனத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை : கிளீனர் போக்சோவில் கைது!

குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா - மார்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு!

  • Share on